வீட்டிலேயே நாட்டுக்கோழி பிரியாணி செய்வது எப்படி? | How to make chicken biryani at home?

FCZF...wBip
7 Jan 2024
37

தேவையானவை:
**நாட்டுக்கோழி –** அரை கிலோ
**சீரகச் சம்பா அரிசி –** அரை கிலோ
**சின்ன வெங்காயம் –** 15
**தக்காளி –** 2
**புதினா - கொத்தமல்லி இலைகள் –** 2 கைப்பிடி அளவு
**பச்சை மிளகாய் –** 2
**மிளகாய்த்தூள் –** இரண்டரை டீஸ்பூன்
**மல்லித்தூள் (தனியாத்தூள்) –** 4 டீஸ்பூன்
**மஞ்சள்தூள் –** ஒரு டீஸ்பூன்
**இஞ்சி - பூண்டு விழுது –** ஒரு டேபிள்ஸ்பூன்
**பெருஞ்சீரகம் -** ஒரு டீஸ்பூன்
**பட்டை –** 2 துண்டு
**கிராம்பு –** 4
**ஏலக்காய் –** 5
**அன்னாசிப்பூ –** 4
**பிரியாணி இலை –** 4
**நெய் –** 3 டேபிள்ஸ்பூன்
**எண்ணெய் –** 3 டேபிள்ஸ்பூன்
**உப்பு –** 3 டீஸ்பூன்

**செய்முறை:**

1. **வெங்காயத்தைத் தோல் நீக்கி,** சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.
2. **தக்காளி, கொத்தமல்லித்தழை, புதினாவைச் சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்.**
3. **கொத்தமல்லித்தழை, புதினா, பெருஞ்சீரகம் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்துக்கொள்ளவும்.**
4. **அடுப்பில் பிரஷர் குக்கர் வைத்து நெய்
, எண்ணெய் சேர்த்து காயவிடவும்.**
5. **காய்ந்த பின் பட்டை, கிராம்பு, ஏலக்காய், அன்னாசிப்பூ, பிரியாணி இலை சேர்க்கவும்.**
6. **பிறகு இதனுடன் வெங்காயம், கீறிய பச்சை மிளகாய், இஞ்சி - பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.**
7. **அத்துடன் தக்காளி சேர்த்து வதக்கவும், பின்னர் அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.**
8. **பிறகு நாட்டுக்கோழி துண்டுகள் சேர்த்து அத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.**
9. **சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரை மூடி மூன்று விசில் விடவும்.**
10. **பிரஷர் அடங்கியவுடன் திறந்து, அரிசி சேர்த்து, சரியான அளவு தண்ணீர் (ஒரு கப் அரிசி = ஒன்றரை கப் தண்ணீர்) ஊற்றி மூடி இரண்டு விசில் வரும் வரை வேகவைக்கவும்.**
11. **சிறிது நேரத்துக்குப் பின் மூடியைத் திறந்து மெதுவாகக் கிளறிவிடவும்.**
12. **நாட்டுக்கோழி பிரியாணி ரெடி.**

**இந்த செய்முறையில் நாட்டுக்கோழி பிரியாணி செய்து உண்டாகும். இதை உங்கள் உணவு செய்வதற்கு அதிசயமான அனுபவம் பெறுவீர்கள்!**

Write & Read to Earn with BULB

Learn More

Enjoy this blog? Subscribe to ajith1a

2 Comments

B
No comments yet.
Most relevant comments are displayed, so some may have been filtered out.